Trending

6/recent/ticker-posts

Live Radio

11 ஆண்டுகளுக்குப் பின் கொழும்பு வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்...!



பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways) நிறுவனம் தனது 2026 குளிர்கால அட்டவணை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, லண்டன் கேட்விக் (Gatwick) மற்றும் கொழும்புக்கு இடையிலான நேரடி வானூர்தி சேவையை மீண்டும் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
2026 ஒக்டோபர் 23 முதல் இந்தச் சேவை மீண்டும் தொடங்கப்படவுள்ளது.


2015 ஆம் ஆண்டிற்குப் பிறகு பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் இலங்கைக்கு வழங்கும் முதல் நேரடிச் சேவை இதுவாகும்.

அந்தவகையில், வாரத்திற்கு மூன்று முறை இந்த வானூர்தி சேவைகள் இயக்கப்படவுள்ளன. இது ஒரு பருவகால (Seasonal) சேவையாக முன்னெடுக்கப்படும்.

நீண்ட தூரப் பயணங்களுக்கு ஏற்ற Boeing 777 ரக வானூர்திகள் இச்சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இந்த வானூர்திகளில் பயணிகளுக்காக மூன்று வகையான கேபின் (Cabin) சேவைகள் வழங்கப்படவுள்ளன.

1. World Traveller (Economy)

2. World Traveller Plus (Premium Economy)

3. Club World (Business Class)

இயற்கை கடற்கரைகள், வனவிலங்கு சரணாலயங்கள், பண்பாட்டு சிறப்புகள் மற்றும் உணவு கலாச்சாரம் ஆகியவற்றிற்கு புகழ்பெற்ற இலங்கைக்கு, லண்டனிலிருந்து நேரடி வானூர்தி சேவை மீண்டும் தொடங்கப்படுவது ஒரு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

Post a Comment

0 Comments