
இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அண்மையில் விபத்துக்குள்ளான ஈரானின் IRIS DENA கப்பலை ஏன் பொறுப்பேற்கவில்லை என அதிகாரிகளிடம் வினவியபோது, அதனை மூழ்கடிப்பது வேடிக்கையானது என அவர்கள் தெரிவித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.
குறித்த கப்பல் மூழ்கடிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;
கடற்படையினர் 46 கப்பல்களை கடலில் மூழ்கடித்துள்ளனர். உங்களால் இதனை நம்ப முடிகிறதா? அந்த மனிதர்கள் குறித்து எனக்கு கவலை ஏற்பட்டது. அந்த கப்பல் நல்ல நிலையில் இருந்ததா? அது ஒரு சிறந்த கப்பல். நாம் ஏன் அதனை கைப்பற்றவில்லை? ஏன் அதனை மூழ்கடித்தோம்? என நான் கேட்டேன். அதற்கு பதிலளித்த அவர்கள், அதனை மூழ்கடிப்பது வேடிக்கையானது எனத் தெரிவித்தனர். அவர்கள் அதனை மூழ்கடிப்பதையே விரும்புகின்றனர். அது உண்மை என்றே நானும் நினைக்கிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.



0 Comments