Trending

6/recent/ticker-posts

Live Radio

ஹார்முஸ் மீது அமெரிக்கா முற்றுகையிட்டதை அடுத்து இரண்டு டேங்கர் கப்பல்கள் பாதையை மாற்றியது...!



அமெரிக்க முற்றுகை அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே சென்று கொண்டிருந்த இரண்டு பெரிய எண்ணெய் கப்பல்கள் தங்கள் பாதையை மாற்றித் திரும்பிச் சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மரைன் டிராஃபிக் தரவுகளின்படி, முற்றுகை தொடங்கியதிலிருந்து கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்ட முதல் நேரடி பாதிப்பு இதுவாகும்.

கப்பல்களில் ஒன்றான 'ரிச் ஸ்டாரி', சீனாவுக்குச் செல்லும் நோக்கத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா கடற்கரையிலிருந்து புறப்பட்டது. ஆனால், புதிய சூழ்நிலை காரணமாக, அது ஜலசந்திக்குள் நுழையாமல் திரும்பிச் சென்றது.

'ஆஸ்ட்ரியா' என்ற கப்பலும், ஹோர்முஸ் ஜலசந்தியை நெருங்கியபோது தனது பாதையை மாற்றிக்கொண்டதாக ஊடக அறிக்கை தெரிவித்தது.

Post a Comment

0 Comments