
புத்தாண்டு காலத்தில் பொருட்கள் கொள்வனவு மற்றும் கொடுப்பனவுகளுக்காக இணையத்தைப் பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மோசடியான விளம்பரங்கள், போலி இணையதளங்கள் மற்றும் வங்கிச் சலுகைகள் ஊடாக மக்களின் பணம் மற்றும் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் போக்கு அதிகரித்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
பொருளாதார கஷ்டங்கள் காரணமாக உடனடி பணலாபத்தை எதிர்பார்க்கும் நபர்கள் இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுவது அதிகரித்துள்ளதாகவும், கடந்த காலங்களில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கிடைக்கும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.



0 Comments