Trending

6/recent/ticker-posts

Live Radio

இலங்கை பெண் ஒருவரை தாக்கிய உக்ரைனிய பெண் – மோதலைக் கட்டுப்படுத்த வந்த...



கல்கிசை பகுதியில் உக்ரைனிய பெண் ஒருவர் இலங்கை பெண் ஒருவரைத் தாக்கியுள்ளார்.

இந்த மோதலைக் கட்டுப்படுத்த வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரையும் குறித்த உக்ரைனிய பெண் தாக்கும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வௌியாகியிருந்தது.

37 வயதான இந்த உக்ரைனிய பெண், திருமண விசா (Spouse Visa) மூலம் கடந்த 18 வருடங்களாக இரத்மலானை பகுதியில் வசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் நடத்தியமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் திருட்டு ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அந்தப் பெண் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments