Trending

6/recent/ticker-posts

Live Radio

வெசாக் தினத்தை முன்னிட்டு Dansal பதிவுகள் ஆரம்பம்...!



வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள் (දන්සල් – Dansal) தொடர்பான பதிவுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி. பொரலெஸ்ஸ தெரிவிக்கையில்:

அன்னதானங்களை நடத்தத் திட்டமிட்டுள்ள தரப்பினர், அது குறித்து அந்தந்தப் பிரதேசத்திற்குப் பொறுப்பான பொது சுகாதார பரிசோதகருக்குத் தெரியப்படுத்தி, பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன்போது, அன்னதானம் நடத்தப்படும் இடம் மற்றும் அது எவ்வகையான (உதாரணமாக: அன்னதானம், குளிர்பானம் போன்றவை) என்பது குறித்த விபரங்களை உரிய அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும்.

இப்பதிவுகளைத் தொடர்ந்து, அன்னதானங்களை சுகாதாரமான முறையில் நடத்துவது தொடர்பான விழிப்புணர்வுத் திட்டமொன்றை அனைத்து ஏற்பாட்டாளர்களுக்கும் முன்னெடுக்க பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments