Trending

6/recent/ticker-posts

Live Radio

IPL இல் பங்கேற்க தயாராகும் மதீஷ பத்திரண!...!



இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண தனது உடற்தகுதி பரிசோதனையில் சித்தியடைந்துள்ளார்.

அதன்படி, இந்தியப் பிரீமியர் லீக் (IPL) தொடரில் விளையாடும் நோக்கில் அவர் மிக விரைவில் இந்தியா புறப்படவுள்ளார்.

சமீபத்தில் நிறைவடைந்த இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் குறுகிய காலம் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகியிருந்தார்.

தற்போது விளையாடுவதற்குத் தேவையான உடற்தகுதியை அவர் எட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, அவர் இந்த ஆண்டு IPL தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்காக விளையாடவுள்ளார்.

Post a Comment

0 Comments