Trending

6/recent/ticker-posts

Live Radio

ஆஷா போஸ்லேவின் மறைவிற்கு பிரபலங்கள் இரங்கல்...!



இந்தியாவின் பிரபல பாடகி ஆஷா போஸ்லே தனது 92வது வயதில் நேற்று காலமானார். அவரது மறைவிற்கு பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பொலிவூட்டின் இசைத் துறையில் ஜாம்பவானாக வலம் வந்த ஆஷா போஸ்லே தனது வசீகர குரலால் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தார். இந்தியாவின் இசை கலாசாரங்களில் அடையாளமாக அவர் திகழ்ந்தார்.

மாரடைப்பு காரணமாக நேற்றைய தினம் மும்பையிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

8 தசாப்தங்களுக்கு மேலாக இசைத்துறையில் தனது வாழ்க்கையை செலவிட்ட ஆஷா போஸ்லே இதுவரை 12 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். இந்நிலையில் அவரின் மறைவிற்கு இந்திய பிரதமர் நரேந்த்ர மோதி உட்பட பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மனித இனம் இந்த பூமியில் இருக்கும் வரை ஆஷா போஸ்லே அவர்களின் இசை இறக்காது என பிரபல பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். இந்தியா கண்ட மிகச் சிறந்த மற்றும் பன்முகத் திறமை வாய்ந்த குரல்களில் ஒன்றென ஆஷா போஸ்லேவின் மறைவிற்கு பிரதமர் மோதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments