உலகளாவிய பயனர்களுக்காக தானாகவே பல்வேறு பணிகளை மேற்கொள்ளக்கூடிய புதிய தலைமுறை செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளை அறிமுகப்படுத்த கூகுள் நிறுவனம் தயாராகியுள்ளது. அதில் முக்கியமாக ‘ஜெமினி ஸ்பார்க்’ (Gemini Spark) எனப்படும் புத்தம் புதிய AI தனிநபர் உதவியாளர் அதிக கவனம் ஈர்த்துள்ளது.
கூகுளின் வருடாந்திர டெவலப்பர் மாநாடான Google I/O நிகழ்வில், இம்முறை “ஏஜென்டிக் ஏஐ” (Agentic AI) எனப்படும், பயனருக்காக சுயாதீனமாக செயல்படும் AI தொழில்நுட்பமே மையக்கருவாக அமைந்தது.
கலிபோர்னியாவின் மவுண்டன் வியூவில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, “நாங்கள் அதிகாரப்பூர்வமாக ஏஜென்டிக் ஜெமினி யுகத்துக்குள் நுழைந்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
மேலும், கடந்த ஆண்டு 400 மில்லியனாக இருந்த ஜெமினி செயலியின் மாதாந்திர செயலில் உள்ள பயனர்கள் எண்ணிக்கை தற்போது 900 மில்லியனைத் தாண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
கூகுள் நிறுவனம் தனது புதிய AI மாடல் வரிசையான “ஜெமினி 3.5” ஐ உலகளாவிய பயனர்களுக்கு வெளியிடத் தொடங்கியுள்ளது. அதன் முதல் கட்டமாக “ஜெமினி 3.5 பிளாஷ்” (Gemini 3.5 Flash) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது அதிவேக செயல்திறன் மற்றும் கோடிங் பணிகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டதாகவும், போட்டி மாடல்களை விட நான்கு மடங்கு வேகமாக இயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், “ஜெமினி ஆம்னி” (Gemini Omni) என்ற வீடியோ உருவாக்க மாடலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உரை, படம் அல்லது ஆடியோ மூலம் வழங்கப்படும் கட்டளைகளை அடிப்படையாகக் கொண்டு, இயற்பியல் விதிகளுக்கு ஏற்ப மிகவும் யதார்த்தமான உயர்தர வீடியோக்களை உருவாக்கும் திறன் இதற்கு உண்டு.
இந்த வீடியோக்கள் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், “SynthID” எனப்படும் கண்ணுக்குத் தெரியாத டிஜிட்டல் வாட்டர்மார்க் தொழில்நுட்பமும் இணைக்கப்பட்டுள்ளது.
ஜெமினி 3.5 தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் “ஜெமினி ஸ்பார்க்” AI உதவியாளர், மின்னஞ்சல்களை ஆய்வு செய்தல், கூட்டக் குறிப்புகளை ஒழுங்குபடுத்தல், தினசரி பணிகளை நிர்வகித்தல் போன்ற செயல்களை தானாக மேற்கொள்ளும் திறன் கொண்டதாகும்.
இது கிளவுட் தொழில்நுட்பத்தின் மூலம் இயங்குவதால், பயனரின் கணினி அணைக்கப்பட்டிருந்தாலும் பின்னணியில் தொடர்ந்து செயல்படும். இருப்பினும், பணப் பரிவர்த்தனை அல்லது மின்னஞ்சல் அனுப்புதல் போன்ற முக்கிய நடவடிக்கைகளுக்கு முன் பயனரின் அனுமதியை கேட்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனுடன், கூகுள் தேடுபொறி வரலாற்றில் கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றமாக “Intelligent Search Box” எனப்படும் புதிய தேடல் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் வழக்கமான குறுகிய சொற்களுக்குப் பதிலாக நீளமான கேள்விகளையும் பதிவிட முடியும். மேலும், படங்கள், வீடியோக்கள் மற்றும் Chrome தாவல்களையும் தேடலுக்கான உள்ளீடுகளாக பயன்படுத்தலாம். AI தொழில்நுட்பத்தின் மூலம் பயனருக்குத் தகுந்த பரிந்துரைகளும் வழங்கப்படும்.
அதேவேளை, “Universal Cart” எனப்படும் புத்திசாலித்தனமான ஷாப்பிங் கருவியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூகுள், யூடியூப் அல்லது ஜிமெயில் பயன்படுத்தும் போது பார்க்கப்படும் பொருட்களை ஒரே இடத்தில் சேமித்து, அவற்றின் விலை குறைப்புகள் மற்றும் சலுகைகள் குறித்து தொடர்ச்சியாக அறிவிப்புகளை வழங்கும் வசதியையும் இது கொண்டுள்ளது.

0 Comments