Trending

6/recent/ticker-posts

Live Radio

போலி சமூக ஊடக அறிக்கைகள் குறித்து CAASL எச்சரிக்கை...!



சிவில் விமானப் போக்குவரத்து விவகாரங்கள் தொடர்பாக பல்வேறு சமூக ஊடகத் தளங்களில் பரப்பப்பட்டு வரும் போலி மற்றும் தவறான தகவல்கள் குறித்து இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை (CAASL), பொதுமக்களை எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் CAASLவெளியிடப்பட்ட ஒரு பொது அறிவிப்பில், தற்போது பகிரப்படும் தகவல்கள் முற்றிலும் போலியானவை மக்களை தவறாக வழிநடத்துபவை மற்றும் அங்கீகரிக்கப்படாதவை என்று கூறியுள்ளது.

அத்துடன், சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியால் எந்தவொரு ஊடக நிறுவனத்திற்கோ அல்லது சமூக ஊடகத் தளத்திற்கோ அத்தகைய அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் வலியுறுத்தியுள்ளது.

சமூக ஊடகங்கள் மூலம் சித்தரிக்கப்பட்ட அறிக்கைகளை உருவாக்கி, வெளியிட்டு, பரப்பிய தனிநபர்கள் மற்றும் தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்து தொடர்பான தகவல்களைப் பகிரும்போது பொறுப்புடன் செயல்படுமாறும், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட ஊடக அறிக்கைகள் மற்றும் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு வழிகள் மூலம் விவரங்களைச் சரிபார்க்குமாறும் பொதுமக்கள், ஊடக நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடகப் பயனர்களை CAASL வலியுறுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments