Trending

6/recent/ticker-posts

Live Radio

விண்வெளியில் சீனாவின் வரலாற்றுச் சாதனை...!



சீனா தனது அதிநவீன ‘லோங் -மார்ச்-10 பி’ ரொக்கெட்டின் பூஸ்டர் பகுதியை (முதல் கட்டப் பகுதி) விண்ணில் ஏவிய பிறகு , கடலில் மிதக்கும் தளத்தில் வெற்றிகரமாகத் தரையிறக்கி சாதனை படைத்துள்ளது.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ரொக்கெட் பூஸ்டர் தொழில்நுட்பத்தில் வெற்றி பெற்ற இரண்டாவது நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது.

அத்துடன், ஹைனான் மாகாணத்தின் வென்சாங் ஏவுதளத்திலிருந்து புறப்பட்ட இந்த ரொக்கெட், அடுத்த 6 நிமிடங்களில் அதன் பூஸ்டர் பகுதியை எவ்வித சேதமுமின்றி கடலில் பாதுகாப்பாகத் தரையிறக்கியுள்ளது.

பொதுவாக ரொக்கெட்டுக்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படுவதால் இதற்கு செலவு அதிகமாகியுள்ளது.

ஆனால், அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் புளூ ஒரிஜின் நிறுவனங்களைப் போல, பூஸ்டர்களை மறுபயன்பாடு செய்வதன் மூலம் சீனா இனி விண்வெளி ஆராய்ச்சிச் செலவுகளைப் பெருமளவு குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments