Trending

6/recent/ticker-posts

Live Radio

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் - பிரித்தானியப் பிரதமர் அண்டி பர்ன்ஹாம் தொலைபேசியில் உரையாடல்...!



பிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள அண்டி பர்ன்ஹாம் உடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்கட்கிழமை ( 20) தொலைபேசியில் உரையாடியுள்ளார். இந்த உரையாடல் "மிகவும் நன்றாக அமைந்தது" எனவும், "விரைவில் இருவரும் நேரில் சந்திக்கவுள்ளதாகவும்" ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

"புதிய பிரதமர் அண்டி பர்ன்ஹாம் உடன் வடகடல் எண்ணெய் வளங்கள், வர்த்தகம், இராணுவக் கூட்டணி, ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள கடற்படைக் கண்ணிவெடிகளை அகற்றுதல் உட்பட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் உரையாடினேன். உரையாடல் மிகவும் சுவாரஸ்யமாகவும் சிறப்பாகவும் அமைந்தது.

அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரினால் அடைக்கப்பட்டுள்ள 'ஹோர்முஸ் நீரிணை' கடல் வழியை பாதுகாப்பாக மீண்டும் திறப்பதற்குப் பிரித்தானியா முழு ஆதரவு அளிக்கும் எனப் பிரதமர் பர்ன்ஹாம் உறுதியளித்துள்ளார்.

பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பில் விவாதிக்க இரு தலைவர்களும் விரைவில் நேரில் சந்திக்க ஒப்புக்கொண்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

பர்ன்ஹாம் பிரதமராகப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே இரு தலைவர்களும் பேசியிருப்பது, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments