பாணந்துறைக் கடற்கரையில் கடலில் குளித்துக் கொண்டிருந்த பத்துக்கும் மேற்பட்டோர் ஜெல்லிமீன்கள் (Jellyfish) உடலில் பட்டதால் காயமடைந்துள்ளதாகப் பாணந்துறை கடற்கரை உயிர்காப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களில் 4 சிறுவர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் (26) பிற்பகல் வேளையில் பாணந்துறைக் கடற்கரைக்கு வருகை தந்து கடலில் குளித்துக் கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அத்துடன், நேற்றுப் பிற்பகல் வேளையில் மட்டும் சிறிய அளவிலான 300-க்கும் மேற்பட்ட ஜெல்லிமீன்கள் கரைக்கு ஒதுங்கியுள்ளதாக உயிர்காப்பக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜெல்லிமீன்கள் உடலில் பட்டதால் காயமடைந்த சிலர் உடனடியாகப் பாணந்துறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
நிலைமை மேலும் தீவிரமடைவதைத் தடுக்கும் வகையில் செயற்பட்ட பொலிஸ் உயிர்காப்பகப் பிரிவினர், அந்நேரத்தில் கடலில் குளித்துக் கொண்டிருந்த அனைவரையும் உடனடியாகக் கரையிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.
எனவே, இக்காலப்பகுதியில் கடற்கரைக்கு வருகை தரும் பொதுமக்கள் கடலில் இறங்கும் போது அதிக விழிப்புணர்வுடனும் கவனத்துடனும் செயற்படுமாறு பாதுகாப்புப் பிரிவினர் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments