முன்னர் எதிர்பார்க்கப்பட்டதை விட 'எல் நினோ' காலநிலை மாற்றத்தின் தாக்கம் இலங்கையில் முன்கூட்டியே உணரப்படக்கூடும் என சுற்றாடல் துறை அமைச்சர் கலாநிதி தம்மிக பட்டபெந்தி எச்சரித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், 'எல் நினோ'வின் உச்சக்கட்ட தாக்கம் நவம்பர் மாதத்தில் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ஜூலை, ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் நாட்டில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும், அதனைத் தொடர்ந்து ஒக்டோபர் முதல் டிசெம்பர் வரையிலான காலப்பகுதியில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை திறம்பட எதிர்கொள்வதற்காக அரச நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
'எல் நினோ' என்பது உலகளாவிய காலநிலை மாற்ற நிகழ்வாகும் என்றும், அதன் தாக்கம் இலங்கைக்கு மட்டும் அல்லாமல் பல நாடுகளையும் பாதிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.



0 Comments