Trending

6/recent/ticker-posts

Live Radio

நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டம் தொடர்பில்...!



நாட்டிவ் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் மாலபேயில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டத்தின் பணிகள் 85 சதவீதத்திற்கும் அதிகமாக நிறைவடைந்துள்ளன.

கடுவலை - மாலபே பகுதியில் அமைந்துள்ள இந்த திட்டம், 20 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பைக் கொண்டுள்ளது.

இதில் 920 சதுர அடி பரப்பளவு கொண்ட 128 வீடுகளும், 700 சதுர அடி பரப்பளவு கொண்ட 128 வீடுகளும் அடங்கலாக மொத்தம் 256 வீடுகள் உள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த வீடமைப்புத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் 2021 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போதிலும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக 2022 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன.

பின்னர், உரிய ஒப்பந்தக்காரர்களுடன் நகர அபிவிருத்தி அதிகாரசபை புதிய ஒப்பந்தங்களைச் செய்து கொண்டதையடுத்து, 2025 ஆம் ஆண்டில் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன.

4,375 மில்லியன் ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டத்தின் கீழ் உருவான வீடுகளை, இந்த ஆண்டின் இறுதிக்குள் மக்களிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments