
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வரான சட்டத்தரணி ரகித்த ராஜபக்ஷ, சமகி ஜன பலவேகயவின் ஹொரணை தொகுதியின் முன்னாள் அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர் அருண வருணஹேந்திக ஆகிய மூவரையும் பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையும் விதித்து உத்தரவிட்ட நீதிவான், அவர்கள் மூவருக்கும் வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்தார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரராகக் கருதப்படும் “ஹரக் கட்டா” என்பவரின் உயிருக்குப் பாதுகாப்பு அளித்து, அவரது தடுப்புக் காவல் உத்தரவை ரத்து செய்து, பூஸ்ஸ தவிர்ந்த வேறு பொருத்தமான சிறைச்சாலையில் தடுப்பதற்கான வசதிகளைச் செய்து தருவதாகக் கூறி, அவரது மனைவியிடம் 12 கோடி ரூபா லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் ரகித்த ராஜபக்ஷ மற்றும் சரித் அபேசிங்க ஆகியோர் கடந்த ஜூன் 25ஆம் திகதி லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



0 Comments