
மோசடியில் சிக்கிக்கொண்டமை எனும் தொனிப்பொருளின் கீழ் இம்முறை மனித கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் மூலமாக இடம்பெறும் மனித கடத்தல்கள் கடந்த காலங்களில் அதிகரித்துள்ளன.
தொழிற்துறை ரீதியிலான நிதி மோசடியில் ஆட்களை சிக்க வைக்கும் நோக்கில் மனித சுரண்டல்கள் அதிகளவில் இடம்பெறுகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் கடத்தப்பட்ட கட்டாயத்தின் அடிப்படையில் குற்றச் செயல்களில் ஈடுபடுத்தப்படுவதுடன் ஒன்லைன் சார்ந்த மோசடிகளில் வலுக்கட்டாயமாக உள்வாங்கப்படுகின்றனர்.
இந்த வகையிலான சுரண்டல்கள் சைபர் குற்றங்கள், நிதி மோசடி, நிதிச் சலi மற்றும் ஊழல்களுடன் நெருங்கிய வகையில் தொடர்புகொள்வதுடன் திட்டமிட்ட குற்றங்களுடன் அவை ஒன்றிணைந்தாக அவை அதிகரிப்பதை இது வெளிப்படுத்துகிறது.



0 Comments