Trending

6/recent/ticker-posts

Live Radio

நாட்டில் வாகன இறக்குமதிச் செலவு ஜூனில் 182 மில்லியன் டொலராகக் குறைவு...!



நாட்டில் மோட்டார் வாகன இறக்குமதிக்கான செலவினம் கடந்த ஜூன் மாதத்தில் 27.1சதவீதம் வரை குறைந்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அதன்படி, ஜூன் மாதத்தில் வாகன இறக்குமதிக்காக 182 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.

இந்த வீழ்ச்சியானது தனிநபர் பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் வர்த்தக ரீதியிலான வாகனங்கள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் இந்த வீழ்ச்சி பதிவாகியிருந்த போதிலும், நடப்பாண்டின் முதல் அரையாண்டில் வாகன இறக்குமதிக்காக ஒட்டுமொத்தமாக 1.25 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.

எனினும், கடந்த 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் வாகன இறக்குமதிக்காகச் செலவிடப்பட்ட 1.57 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், இது குறிப்பிடத்தக்க அளவிலான குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments