
மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சபரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் மழை அல்லது இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும்.
வடமத்திய, சபரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையை ஒட்டிய கடற்பிரதேசங்களில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும்.
காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும். புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையை ஒட்டிய கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையை ஒட்டிய கடற்பிரதேசங்கள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். எனவே, இக்கடற்பிரதேசங்களில் கடற்றொழில் மற்றும் கடற்பயணங்களில் ஈடுபடும் சமூகத்தினர் இதுகுறித்து அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையை ஒட்டிய கடற்பிரதேசங்களில் கடல் அலைகள் 2.5 – 3.0 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுகிறது.



0 Comments