Trending

6/recent/ticker-posts

Live Radio

தனியார் பாதுகாப்பு சேவைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை - பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர...!



இலங்கையில் உள்ள தனியார் பாதுகாப்பு சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத் திருத்தங்களை உள்ளடக்கிய சட்டமூலம் எதிர்வரும் சில மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அவர், குறித்த சட்டமூலத்தை தயாரிப்பதற்கு சட்ட மா அதிபர் திணைக்களம், தொழில் திணைக்களம் மற்றும் காவல்துறை ஆகியவற்றின் உதவிகள் பெறப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments