Trending

6/recent/ticker-posts

Live Radio

மழையினால் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படாது என உறுதி – வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக அஜித் விஜேமான்ன...!


நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை மற்றும் மழையுடனான சூழல் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கோ அல்லது நடைபெறவுள்ள பரீட்சைகளுக்கோ எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படாதவாறு அவசியமான அனைத்து முகாமைத்துவ மற்றும் பாதுகாப்புத் திட்டங்களும் முன்கூட்டியே தயார்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.
Teaching & Classroom Resources

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கும் பரீட்சைகளுக்கும் எந்தவிதத் தடையோ அல்லது அச்சுறுத்தலோ ஏற்படாத வகையில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. குறிப்பாக, எதிர்வரும் 10 ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டில் மழை வீழ்ச்சி கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுவதால், மாணவர்களின் பரீட்சைகள் எந்தவிதத் தடங்கலும் இன்றி சுமூகமாக நடைபெறும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
South Asians & Diaspora

Post a Comment

0 Comments