Trending

6/recent/ticker-posts

Live Radio

புத்தளத்திலிருந்து பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களுக்கு எச்சரிக்கை....!



புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்தான மஞ்சள் நிற (Amber) எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை பேரழிவு முன்னெச்சரிக்கை மையம் வெளியிட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை 2026 ஓகஸ்ட் 01 ஆம் திகதி இரவு 10.30 மணி முதல் ஓகஸ்ட் 02 ஆம் திகதி இரவு 10.30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடற்பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 55 முதல் 65 கிலோமீற்றர் (55-65 kmph) வேகத்தில் பலத்த வேகமான காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் பிரதேசம் கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

எனவே, குறித்த கடற்பிரதேசங்களில் கடற்றொழில் மற்றும் நாவாய் (நாவாயியல்) நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்படையினர் மற்றும் மீனவர்கள் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எதிர்காலத்தில் வெளியிடப்படும் வானிலை முன்னறிவிப்புகளை தொடர்ச்சியாக அவதானிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments