Trending

6/recent/ticker-posts

Live Radio

வட மாகாண சுகாதார சேவைக்கு புதிதாக 350 சுகாதார உதவியாளர்கள்...!



வட மாகாண சுகாதார சேவைக்கு 350 புதிய சுகாதார உதவியாளர்கள் இன்றைய தினம் (18) நியமிக்கப்பட உள்ளனர்.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்திய நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் ஆகியோர் தலைமையில் நியமனம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெறவுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலை, யாழ் தாதியர் கல்லூரி உள்ளிட்ட, மத்திய சுகாதார அமைச்சின் கீழும் வட மாகாண சபையின் கீழும் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்காக 350 புதிய சுகாதார உதவியாளர்களின் நியமனம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments