
பிரேசிலில் சூதாட்டத்திற்கு தடை விதித்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி லூலா டா சில்வா அறிவித்துள்ளது. தேர்தல் இடம்பெறுவதற்கு சிறிது நாட்களே எஞ்சியுள்ள நிலையில் அவர் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளமை விசேட அம்சமாகும்.
நான்காவது தடவையாகவும் பிரேசிலின் ஜனாதிபதியாக தெரிவாகுவதற்கான எதிர்பார்ப்பை லூலா டா சில்வா கொண்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். விளையாட்டு சார்ந்த அனைத்து சூதாட்ட செயற்பாடுகள் மற்றும் ஒன்லைன் கெஷினோவிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு பிரேசிலில் சூதாட்ட விளையாட்டு சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டது. எனினும் இந்த விளையாட்டினால் பல குடும்பங்களின் பொருளாதார சூழல் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது. இத்தகையை சூதாட்டத் துறையானது ஒரு வகை புற்றுநோய் என ஜனாதிபதி லூலா டா சில்வா தெரிவித்துள்ளார். இதனால் சூதாட்டத்தை இல்லாமல் செய்யாவிட்டால் அது தமது மக்களை கொன்றுவிடுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரேசில் முன்னாள் ஜனாதிபதி ஜார் பொல்சனாரோவின் மகனும் தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.



0 Comments