Trending

6/recent/ticker-posts

Live Radio

சம்மாந்துறையில் வீதியோர மீன் விற்பனைக்கு எதிராக சிறப்பு சோதனை.

 சம்மாந்துறை பிரதேசத்தில் பொது வீதியோரங்களில் மீன் விற்பனை செய்வோரைக் குறிவைத்து சிறப்பு வர்த்தக சோதனை நடவடிக்கை வியாழக்கிழமை (17) முன்னெடுக்கப்பட்டது.


சம்மாந்துறை பிரதேச சபையின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்தச் சோதனை நடவடிக்கையில், சிறப்பு அதிரடிப்படை, பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி  அலுவலகத்தைச் சேர்ந்த பொது சுகாதார பரிசோதகர்கள்  உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


இதன்போது, பொது வீதிகளில் மீன் மற்றும் உணவுப் பொருட்களை விற்பனை செய்வது தொடர்பான விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படும் 12 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments