Trending

6/recent/ticker-posts

Live Radio

ரணிலின் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு...!



முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராக பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் அழைக்கப்படவுள்ளது.

அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், அதற்கான ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னதாக நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.

இதன்படி, சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக வழக்கை இன்று மீண்டும் அழைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments