Trending

6/recent/ticker-posts

Live Radio

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!



நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையானது இன்று (24) மாலை 5:00 மணி முதல் நாளை (25) மாலை 5:00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு எச்சரிக்கை (அகற்றல்/நிலை 3):

காலி – நியாகம, தவலம, நாகொடை, நெலுவ

கண்டி – உடபத்தளை, கங்கை இஹல கோரள, பஸ்பாகே கோரள, தொலுவ

நுவரெலியா – நோர்வூட், கொத்மலை கிழக்கு, கொத்மலை மேற்கு, அம்பகமுவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள்.

மஞ்சள்/அம்பர் எச்சரிக்கை (எச்சரிக்கை/நிலை 2):

காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் எச்சரிக்கை (கவனமாக இருத்தல்/நிலை 1):

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மண்சரிவு அபாயப் பகுதிகளில் உள்ள மக்கள் தொடர்ச்சியான மழையின் நிலைமையை அவதானித்து, அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

Post a Comment

0 Comments