Trending

6/recent/ticker-posts

Live Radio

கிரிக்கெட் சபைக்கு எதிராக வழக்குத் தொடுத்த பிரமோத்ய விக்கிரமசிங்க...!



இலங்கை கிரிக்கெட் சபை தம்மை நியாயமற்ற முறையில் பதவியிலிருந்து நீக்கியமைக்கு எதிராக, ரூ. 75 மில்லியன் நட்டஈடு கோரி முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் பிரமோத்ய விக்கிரமசிங்க கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

தனது இரண்டு வருட பதவிக்காலம் நியாயமற்ற முறையிலும், முறைசாரா விதத்திலும் முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதற்கு எதிராகவே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2025 டிசம்பர் 17ஆம் திகதி 2 வருட காலப்பகுதிக்காக நியமிக்கப்பட்ட தன்னை, இலங்கை கிரிக்கெட் மாற்றக் குழு முன்அறிவிப்போ, போதிய நியாயப்படுத்துதலோ அல்லது முறையான வழிமுறையோ இன்றி பதவியிலிருந்து நீக்கியதாக விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments