Trending

6/recent/ticker-posts

Live Radio

இந்தியாவை நோக்கி நகரும் குறைந்த தாழமுக்கம்...!



மேற்கு- மத்திய மற்றும் அதற்கு அப்பால் வடமேல் வங்கான விரிகுடாவை அண்மித்ததாக காணப்படும் குறைந்த தாழமுக்கம் மேற்கு பக்கமாக வடமேல் நோக்கி பயணித்து இந்தியாவின் வடக்கு ஆந்த்ரபிரதேஷ் மற்றும் அதற்கு அப்பால் தெற்கு ஒடிசா கரையோரத்தின் ஊடாக பயணிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த தாழமுக்கத்தின் நேரடி தாக்கம் இலங்கைக்கு இல்லாத போதிலும் இதனால் ஏற்படும் பலத்த காற்று காரணமாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை நீடிக்குமென திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது.

சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும். வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் ஆங்காங்கே மழை பெய்யலாம்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணத்திலும் திருகோணமலை , ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே காற்றானது 40 – 50 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமா பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கல் ஏற்படுமெனவும் இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments