
நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 96,040 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், டெங்கு காரணமாக 72 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், ஓகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 10,155 பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ள மாகாணமாக மேல் மாகாணம் காணப்படுவதுடன், அங்கு 50,760 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாவட்ட ரீதியில் கம்பஹா மாவட்டத்தில் 20,444 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மேலும், நாடளாவிய ரீதியில் 50 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் அதிக ஆபத்தான டெங்கு வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.



0 Comments