Trending

6/recent/ticker-posts

Live Radio

வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்க நவம்பர் 30 இறுதித் திகதி...!



வருடாந்த வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதியுடன் நிறைவடைவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த திகதிக்கு முன்னர் வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்கத் தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான தனிநபர் வருமான வரி அறிக்கைகளை இணையவழி ஊடாகச் சமர்ப்பிக்குமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

Post a Comment

0 Comments