Trending

6/recent/ticker-posts

Live Radio

சீரற்ற வானிலை ; நுவரெலியாவில் 49 குடும்பங்களைச் சேர்ந்த 162 பேர் பாதிப்பு...!


நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் கடும் மழையினால் 49 குடும்பங்களைச் சேர்ந்த 162 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நான்கு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய மழை நிலைமையைக் கருத்திற்கொண்டு, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ மற்றும் நோர்வூட் பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள சில பகுதிகளுக்கு வெளியேறுமாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் மாவட்டச் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், 45 குடும்பங்களைச் சேர்ந்த 148 பேர் ஒரு இடம்பெயர்ந்து தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான வசதிகளை வழங்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதாகவும், பிரதேச செயலகப் பிரிவுகளால் வெளியிடப்பட்ட சிவப்பு அறிவிப்புகளில் அபாய நிலை குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் வசிக்கும் மக்கள், சுற்றியுள்ள பகுதிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கிராம அலுவலர்கள் உட்பட பேரிடர் மேலாண்மையில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகளும் எந்தவொரு அவசரநிலைக்கும் தயாராக உள்ளனர் என அவர் சுட்டிக்காட்டினார்.

மேல் கொத்மலை மற்றும் விமலசுரேந்திரா உள்ளிட்ட இரண்டு நீர்த்தேக்கங்களும் மிக விரைவாக நிரம்பி வழியும் நிலையில் உள்ளது இவற்றின் வான்கதவுகள் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் கொத்மலையில் உள்ள காமினி திசநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 4.26 மீட்டர் அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும், நீர்மட்டம் உயரும்போது வான்கதவுகள் தானாகவே திறக்கும் என்றும் மழை தொடரும் பட்சத்தில் மண்சரிவு அபாயம் அதிகரிக்கக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னக்கோன் அறிவுறுத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments