Trending

6/recent/ticker-posts

Live Radio

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகள் திறப்பு...!



தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 30 வான் கதவுகளில் எட்டு கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, வினாடிக்கு 7,884 கனஅடி நீர் கலா ஓயாவில் திறந்துவிடப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், கலா ஓயாவை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, அங்குள்ள நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

கனமழை காரணமாக முன்னதாக இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றில் ஒரு கதவு இன்று (22) காலை தானாக மூடப்பட்டுள்ளது.

எனினும், மழை தொடர்ந்து பெய்யும் பட்சத்தில், நீர்த்தேக்கத்தின் ஏனைய வான் கதவுகளும் தானாகத் திறக்கப்படக்கூடும் எனப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, மேல் கொத்மலை அணைக்குக் கீழ்ப்பகுதியில் கொத்மலை ஓயாவின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments