Trending

6/recent/ticker-posts

Live Radio

சுரேஷ் சலே மனு மீதான இடையீட்டு மனுக்கள் நிராகரிப்பு...!



பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே தாக்கல் செய்த ரிட் மனுவில் தலையிட்டு கருத்துத் தெரிவிக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (22) நிராகரித்துள்ளது.

வணக்கத்திற்குரிய பெங்கமுவே நாலக தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் குழுவினரால் இந்த இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

குறித்த மனுக்களை நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments