கொழும்பு உட்பட பல பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்வதில் நுகர்வோர் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், விநியோகத் தடங்கல்கள் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக நீடிப்பதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்திருந்த நிலையில், கப்பல் வருகையில் ஏற்பட்ட இரண்டு நாள் தாமதமே இதற்குக் காரணம் என்று லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
பயண வழிகாட்டி
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவிக்கையில், கடன் பத்திர கடிதங்களை திறப்பதில் ஏற்பட்ட தாமதம் அல்லது கொடுப்பனவுச் சிக்கல்களே இறக்குமதியைப் பாதித்தன என்று கூறவது பொருத்தமல்ல, கப்பல் வருகையில் ஏற்பட்ட இரு நாள் தாமதமே அதற்கு காரணமாகும். விநியோகத்தில் தற்காலிகத் தடையே ஏற்பட்டது. தற்போது எரிவாயு சிலிண்டனர்கள் சந்தைக்கு வந்துகொண்டிருக்கிறன, எதிர்வரும் ஓரிரு நாட்களில் நிலைமை சீராகிவிடும்.
அதேநேரம் லாப்ஸ் நிறுவனத்தின் விநியோகப் பற்றாக்குறையை ஈடுசெய்யும் அதேவேளையில், தங்களது நிறுவனத்தின் நிலுவையில் உள்ள தேவைகளையும் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
தற்போதைய நிலையில் வாரத்தின் நடுப்பகுதியில் 3,900 மெற்றிக் தொன் எரிவாயுவை லிட்ரோ நிறுவனம் பெற்றுக்கொண்டுள்ள நிலையில் 3,500 மெற்றிக் தொன் எடையுள்ள மற்றொரு கப்பல் வருகை தரவுள்ளதால் சந்தையில் நெருக்கடியான நிலைமைகள் ஏற்படாது. அந்த வகையில் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய லிட்ரோ நிறுவனம் முழுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றார்.
0 Comments