Trending

6/recent/ticker-posts

Live Radio

இடைத்தேர்தலுக்கு முன் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தாது – ட்ரம்ப்...!



எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்கு முன்பு எந்த நேரத்திலும் அமெரிக்கா ஈரானைத் தாக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அவர் தமது ட்ருத் சமூக ஊடகத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாக இடம்பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் ஈரான் மீதான தடை உத்தரவு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments