
அரச சேவைப் பொறியியலாளர் சங்கம் நானை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.
கள வருகை மற்றும் போக்குவரத்துக் கொடுப்பனவை 75,000 ரூபாவாக மீண்டும் வழங்குமாறு கோரியே, நாளை (16) முதல் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச சேவைப் பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, கள ஆய்வுகள், மேலதிக நேரக் கடமைகள் மற்றும் பல்வேறு அரச கூட்டங்கள் உள்ளிட்ட பணிகளில் இருந்து விலகுவதற்கும் சங்கம் தீர்மானித்துள்ளது.
கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகள் காலவரையின்றித் தொடரும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.



0 Comments