Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

உலகக்கோப்பை கால்பந்து: பரபரப்பான போட்டியில் ஜப்பான் அணியை வீழ்த்தி கோஸ்டாரிகா வெற்றி...!



இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜப்பான் - கோஸ்டாரிகா அணிகள் மோதின..

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த 20-ந் தேதி கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜப்பான் - கோஸ்டாரிகா அணிகள் மோதின.இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் இரு அணிகளும் கடுமையாக போராடியும் கோல் அடிக்கமுடியவில்லை.இதனால் முதல் பாதி முடிவில் 0-0 என சமநிலையில் இருந்தன.


பின்னர் நடைபெற்ற 2வது ஆட்டத்தில் ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் கோஸ்டாரிகா அணியின் கெய்ஸர் புல்லர் ஒரு கோல் அடித்தார்.இதனால் அந்த அணி முன்னிலை பெற்றது பின்னர் ஜப்பான் அணி பதிலடி கொடுக்க கோல் அடிக்கவில்லை. இதனால் 1-0 என கோஸ்டாரிகா வெற்றி பெற்றது.

Post a Comment

0 Comments