2022 ஆம் ஆண்டில் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களால் நாட்டிற்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மேற்பட்ட தொகை அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதத்தில் அவர்கள் அனுப்பிய தொகை 384.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 30 மில்லியன் அமெரிக்க டொலர் அதிகரிப்பாகும்.
0 Comments