வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான பணம் மற்றும் கடவுச்சீட்டை முகவர் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கையொன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
அதன்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் 1989 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொள்ளலாம் அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் www.slbfe.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று சம்பந்தப்பட்ட முகவர் நிலையத்தின் சட்டபூர்வமான தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணை அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments