Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

மூளை, தண்டுவடத்தில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகளைக் கண்டறிய புதிய தொழில்நுட்பம்...!


மூளை மற்றும் முதுகு தண்டுவடப் பகுதியில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கட்டிகளைக் கண்டறியும் வகையில், மெஷின் லேர்னிங் (Machine Learning) சார்ந்த கணினி தொழில்நுட்பத்தை சென்னை IIT (Indian Institute of Technology) விஞ்ஞானிகள் குழு உருவாக்கியுள்ளது.

மூளை மற்றும் முதுகுத் தண்டுவடத்தில் புற்றுநோயை உண்டாக்கும் கட்டிகளை துல்லியமாகக் கண்டறிவதற்கான Machine Learning சார்ந்த அடிப்படையிலான கணினி தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

‘GBM Driver’ (GlioBlastoma Mutiforme Drivers) என அழைக்கப்படும் இந்தக் கருவி மூலம் மூளை மற்றும் முதுகுத்தண்டு பகுதிகளில் ஏற்படக்கூடிய கட்டிகளை ஒன்லைனில் கண்டறிய முடியும்.

Glioblastoma (GBM) என்பது மூளை மற்றும் முதுகுத்தண்டு வடத்தில் வேகமாகவும் தீவிரமாகவும் வளரும் கட்டியாகும். இந்தக் கட்டியைப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், இதனால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்நாள் காலம் வெறும் 2 ஆண்டுகளுக்கும் குறைவாக உள்ளதால், அதிநவீன சிகிச்சை முறைகளைக் கண்டறிவதற்கான தேவைப்பாடு அதிகரித்துள்ளது.

புதிய கணினி தொழில்நுட்பம் மூலம் மூளை மற்றும் தண்டுவடத்தில் வளரும் புற்றுநோய்க் கட்டியையும் , அதன் வளர்ச்சி மற்றும் அதற்கான சிகிச்சை வாய்ப்புகளையும் துல்லியமாகக் கண்டுபிடிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது முறையான மருத்துவ உக்தியைக் கண்டறிய உதவும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments