Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



இலங்கையில் இறப்பர் பால் வெட்டும் நவீன Robo...!


தொழிலாளர் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் நோக்கில் இலங்கையில் முதன் முறையாக ரோபோ தொழில்நுட்பத்தின் உதவியுடன் இறப்பர் பால் வெட்டும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம், இலங்கையிலுள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.

நாட்டில் சுமார் 37 மில்லியன் இறப்பர் மரங்கள் உள்ளதுடன், தொழிலாளர் பற்றாக்குறையால் அவற்றில் 50 சதவீத இறப்பர் மரங்களில் அறுவடை செய்யப்படவில்லை. கணினி மூலம் இயக்கப்படும் இந்த ரோபோ இயந்திரம், ஒரே நேரத்தில் ஒரு கிலோமீற்றர் பரப்பளவில் 20,000 இறப்பர் ஆலைகளை தானாகவே கட்டுப்படுத்தும் திறன் கொண்டதெனவும் தெரியவருகின்றது.

Post a Comment

0 Comments