யோகர்ட் என்பது புளிப்பாக்கப்பட்ட பாலாகும். பதப்படுத்தப்பட்ட பாலில் பல மணி நேரத்திற்கு உயிருள்ள பாக்டீரியாக்களை சேர்த்து வைப்பதன் மூலம் யோகர்ட் தயாரிக்கப்படுகிறது.
தயிரை விட யோகர்ட் அதிக ஊட்டச்சத்து கொண்டது. இது புரதங்கள் மற்றும் கால்சியத்தின் அற்புதமான மூலமாகும். இதில் பி காம்ப்ளக்ஸ் விட்டமின்கள், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. வயிற்றுக்கு திருப்தியான உணர்வை வழங்குகிறது.
சிறுவர் முதல் பெரியோர் வரை வயது வேறுபாடின்றி விரும்பிச் சாப்பிடும் உணவுப்பொருளாக யோகர்ட் காணப்படுகின்றது. ஆகையால், சிறிய பெட்டிக்கடைகள் முதல் நட்சத்திர ஹோட்டல்கள் வரை இந்த யோகர்ட் காணப்படுகின்றது.
யோகர்ட்டில் கால்சியம், புரதம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் விட்டமின்-டி உள்ளிட்ட எலும்புகளின் அடர்த்தியை பராமரிக்க இன்றியமையாத பல ஊட்டச்சத்துகள் உள்ளன.
யோகர்ட்டை தொடர்ந்து உட்கொள்வது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, பல்வேறு நோய் தொற்றுகளில் இருந்து நம் உடலைப் பாதுகாக்கிறது. இரைப்பை குடல் நோய்த்தொற்றுகள், சளி, காய்ச்சல் மற்றும் புற்றுநோய், சுவாசப் பிரச்சினைகளுக்கு எதிராக யோகர்ட் திறம்பட போராடுகிறது. யோகர்ட்டில் உள்ள மெக்னீசியம், செலினியம் மற்றும் துத்தநாகமும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன.
நமது உடலை பெருங்குடல், சிறுநீரக மற்றும் மார்பக புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் தன்மையை யோகர்ட் கொண்டுள்ளது. யோகர்ட் கால்சியத்தின் வளமான மூலமாகும். இதனால் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும். யோகர்ட் உட்கொள்வது, எலும்பு முறிவு மற்றும் எலும்புப்புரை (ஆஸ்டியோபோரோசிஸ்) அபாயத்தை குறைக்கும்.
யோகர்ட்டில் உள்ள அதிகப் புரதச்சத்து நம்மை நிறைவாக உணரவைத்து பசியை குறைக்கிறது. இதனால் நமது கலோரி நுகர்வு குறைகிறது. இது எடை இழப்புக்கு ஊக்குவிக்கிறது.
தயிருக்கும் யோகர்ட்டுக்குமுள்ள வித்தியாசம்:
பாலில் சிறிது மோர் ஊற்றி வைப்பதன் மூலம், அது இயற்கையாகப் புளித்துப் போய் தயிராகிறது. அதனால் வீடுகளிலேயே எளிதாக தயிரைத் தயார் செய்யலாம். ஆனால், யோகர்ட் தயாரிப்பதற்கு உயிருள்ள பாக்டீரியாக்கள் தேவை. எனவே, அதனை உணவு தொழிற்சாலைகளில் தான் தயார் செய்ய முடியும். கால்சியம் உள்ளிட்ட பல சத்துக்களை உள்ளடக்கிய தயிரானது இலங்கை, இந்திய உணவுமுறையில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.

0 Comments