Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

Air- Ship பறக்கும் கப்பல் ஜனவரி முதல்...!


தெற்காசியாவில் முதன் முறையாக இலங்கையில் Air- Ship சேவையை ஆரம்பிக்கும் ஒப்பந்தம் சர்வதேச Air Space நிறுவனத்தின் தலைவர் ஷுகரேவ் செர்ஜி நிகோலாவிச்சுக்கும், கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்துக்குமிடையில் ஆளுநர் செந்தில்தொண்டமான் தலைமையில் நேற்று(12) கைச்சாத்திடப்பட்டது. கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

திருகோணமலையில் நிலாவெளி, மட்டக்களப்பில் பாசிக்குடா, அம்பாறையின் அருகம்பே போன்ற சுற்றுலா தளங்களின் இயற்கை அழகை இரசிக்கும் வகையிலும் பயணத்தை இலகுபடுத்தும் நோக்கிலும் பறக்கும் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இவ்வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த சர்வதேச Air Space நிறுவனத்தின் தலைவர் ஷுகரேவ் செர்ஜி நிகோலாவிச்,

இலங்கையின் பல மாகாணங்களை ஒப்பிடும்போது, கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒன்றரை வருடமாக ஆளுநர் செந்தில் தொண்டமானால் கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் வளர்ச்சி பாதையை நோக்கி செல்வதை அவதானிக்க முடிந்தது. ஆளுநர் Air- Ship சேவையை ஆரம்பிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். அதற்கமைய கடந்த ஒரு மாத காலமாக எமது நிறுவனத்தின் அதிகாரிகள் இங்கிருந்து இவ்வேலைத்திட்டம் குறித்து ஆராய்ந்தனர். எங்களுடைய ஆய்வு அறிக்கையின்படி இவ்வேலை திட்டத்துக்கு நல்ல வரவேற்புள்ளதை அறிந்து air ship வேலைத்த்திட்டத்துக்காக முழுமையான முதலீடு செய்யவுள்ளோமென அவர் தெரிவித்தார்.

நன்றி...
தினகரன்

Post a Comment

0 Comments