தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ்.
முதல் சீசன் கொடுத்த வெற்றி அடுத்தடுத்து சீசன்கள் ஒளிபரப்பாக விரைவில் 8வது சீசன் வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 7 சீசனாக சுவாரசியம் குறையாமல் தொகுத்து வழங்கியவர் நடிகர் கமல்ஹாசன்.
இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் விஜய்சேதுபதியை தொலைக்காட்சி தேர்வுசெய்தது.
இதற்கான அதிகாரபூர்வ ப்ரோமோவும் தொலைக்காட்சி வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளனர்.
விரைவில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஆரம்பிக்கவுள்ள நிலையில், ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற புதிய புரொமோவை பிக்பாஸ் குழு வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்ட பிக்பாஸ் ரசிகர்கள் விஜய் சேதுபதிக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
0 Comments