Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளுக்கு மிக மகிழ்ச்சியான செய்தி!

 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது விமானங்களில் வணிக வகுப்பில் பயணிக்கும் பயணிகளுக்காக Serendib Delights என்ற தனித்துவமான சேவையை அறிமுகம் செய்துள்ளது.

இது உணவை விண்ணப்பம் செய்யும் வாய்ப்பை வழங்குவதாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமையாளர் கயான் விக்கிரம தெரிவித்துள்ளார்.

இது பயணிகள் தங்கள் விமானத்திற்கு முன் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுகளில் இருந்து தங்களுக்கு பிடித்த உணவை விண்ணப்பம் செய்ய உதவும்.

Serendib Delights சேவையின் கீழ், பயணிகள் சால்மன் ஸ்டீக், சிக்கன் லாம்ப்ரேஸ், பில்லட் ஸ்டீக், மீன் பஜ்ஜி, மாட்டிறைச்சி பர்கர்கள், கடல் உணவுகள் மற்றும் அரேபிய, இந்திய மற்றும் மேற்கத்திய சமையல் மரபுகளில் இருந்து பல்வேறு சுவையான உணவுகளை கோரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு | Srilankan Airlines Inflight Meal Service Tourist

Post a Comment

0 Comments