Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



நாங்கள் உகாண்டா கதை எதுவும் சொல்லவில்லை”


உகாண்டாவில் மறைத்து வைக்கப்பட்ட பணம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி குற்றச்சாட்டை முன்வைத்ததாக எழுந்த கூற்றுகளை மறுத்த NPP உறுப்பினர் டில்வின் சில்வா, அத்தகைய கூற்றுக்கள் ஐக்கிய மக்கள் சக்தியால் தான் முன்வைக்கப்பட்டதாக கூறினார்.

கொள்கலன்களில்  அமெரிக்க டொலர்கள் இங்கு அச்சிடப்பட்டு உகாண்டாவிற்கு கொண்டு செல்லப்பட்டதாகவே NPP கூறியதாக அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

"நாங்கள் உகாண்டா கதை எதுவும் சொல்லவில்லை. எஸ்.ஜே.பி.க்கள் தான் அப்படிச் சொன்னார்கள். உகாண்டாவிலும் பிற நாடுகளிலும் மறைத்து வைக்கப்பட்ட பணம் இருக்கலாம் என்று தான் முந்தைய காலத்தில் நாங்கள் சொன்னோம்.

டொலர்கள் நிறைந்த கன்டெய்னர்கள் இங்கே அச்சிடப்பட்டு உகாண்டாவிற்கு கொண்டு செல்லப்பட்டன என்று தெரிவித்தோம். அவர்களின் கொள்கை என்னவென்றால், அவர்களே பொய்களைப் பேசுகிறார்கள், அந்தப் பொய்களை நாங்கள் சொன்னதாகக் கூறுகிறார்கள், ”என்று அவர் கூறினார்.


Post a Comment

0 Comments