Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



குளியாப்பிட்டி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் பலி...!



இன்று (23) அதிகாலை குளியாப்பிட்டி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் வீழ்ந்து மூழ்கிய ஜீப் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குளியாப்பிட்டி ஹெட்டிபொல வீதியில் கம்புராபொல பாலத்திற்கு அருகில் புஜ்கமுவ ஓயாவில் இந்த ஜீப் வண்டி வீழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குளியாப்பிட்டியவில் இருந்து ஹெட்டிபொல நோக்கிச் சென்ற ஜீப் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து இடம்பெற்ற இடம் வளைவுகள் நிறைந்த பகுதி எனவும், தற்போதைய விசாரணைகளின் படி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி ஆற்றில் வீழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கிரேனின் உதவியுடன் ஆற்றில் வீழ்ந்த ஜீப் வண்டியை வெளியில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், வாகனத்தில் சிக்கிய இருவர் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் ஏற்கனவே உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 27 வயதுடைய குருணாகல் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், இருவரும் சகோதரர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

சடலங்கள் குளியாப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், குளியாப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments