காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகிய பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறினார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானை இன்று (20) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி தயாரித்த விசேட காணொளி தொகுப்பு ஒன்றில் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் முன்னாள் செயலாளரான அசாத் மௌலானா என்பவர் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
அதில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானுக்கும் ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய தாக்குதல் தாரிகளுக்கும் தொடர்பு இருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் அவர் வெளிப்படுத்திய இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். அதன்படி, இன்று காலை 9 மணியளவில் அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.
0 Comments