Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



டெங்கு மரணங்கள் தொடர்பான அறிவிப்பு...!



நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் 521 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 46,048 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 19,761 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments